இந்தியா

வீட்டுக்கு போக விரும்பிய மாணவி - மாநிலம் கடந்து பத்திரமாக சேர்த்த போலீஸ்

வீட்டுக்கு போக விரும்பிய மாணவி - மாநிலம் கடந்து பத்திரமாக சேர்த்த போலீஸ்

webteam

வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் எனக்கேட்ட கல்லூரி மாணவியை நொய்டா போலீஸார் பத்திரமாக சேர்த்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் முதுகலை படிக்கும் மாணவி ஒருவர் இரவு நேரத்தில் போலீஸாரை அணுகினார். தன்னுடன் வசிக்கும் பெண்கள் அனைவரும் தங்கள் சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும், தானும் தன்னுடைய குடும்பத்தாரை சென்று சந்திக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அத்துடன் தனது வீடு ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து மாணவியின் கோரிக்கையை ஏற்ற நொய்டா காவல்துறையினர், அவரை பத்திரமாக குருகிராம் வரை அழைத்துச்சென்று குடும்பத்தாருடன் சேர்த்தனர். மேலும், அப்பெண் குடும்பத்தாரை சந்தித்து மகிழும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளமான ட்விட்டரிலும் நொய்டா போலீஸ் வெளியிட்டுள்ளனர்.

இந்த;d சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம், இதுபோன்று நாட்டில் எத்தனையோ மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிப்பார்களே என்று சிந்திக்கவும் வைக்கிறது. இதற்காக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.