இந்தியா

கழிவறை இல்லாததால் விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி

webteam


வீட்டில் கழிவறை கட்டித்தராதது கொடுமை என கூறியுள்ள நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கணவனிடம் இருந்து விவாகரத்து அளித்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பில்வாரா குடும்ப நல நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. கழிவறை வசதியை வழங்காதது பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமை என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 24 வயதான இளம் பெண் ஒருவர் தனது கணவனிடம் 4 ஆண்டுகளாக முறையிட்டும் கழிவறை கட்டித்தரவில்லை என்றும் எனவே விவாகரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு செய்தார். திறந்த வெளிக் கழிப்பிடத்தை பயன்படுத்த நிர்பந்திக்கப்படுத்தப்படுவதாகவும் இதை தனது கவுரவத்துக்கு இழப்பாக கருதுவதாகவும் அந்தப் பெண் தனது மனுவில் கூறியிருந்தார். கழிவறை இல்லாததை காரணம் காட்டி விவாகரத்து வழங்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை என்றும் தெரிகிறது