இந்தியா

"இப்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை"- ஆம் ஆத்மி

"இப்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை"- ஆம் ஆத்மி

Rasus

தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட ஆர்வமாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு சீட் கொடுக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியும் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதன்படி டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. அதேசமயம் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே களம் காணவும் அக்கட்சி முடிவெடுத்திருக்கிறது. டெல்லியில் இதுவரை 6 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இன்னும் மேற்கு டெல்லி தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போதைய எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வரும் மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சீட் கொடுக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான கோபால் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்கூறும்போது, மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் போட்டியிடம் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிடுவார்கள் எனக் கூறினார்.