இந்தியா

'தாஜ்மகாலை கட்டியது ஷாஜகான்தான் என்பதற்கான ஆதாரம் இல்லை' - உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!

'தாஜ்மகாலை கட்டியது ஷாஜகான்தான் என்பதற்கான ஆதாரம் இல்லை' - உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!

webteam

தாஜ்மகாலை கட்டியது ஷாஜகான் தான் என்பதற்கான வலுவான ஆதாரம் கிடையாது எனவே இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறிய குழுவை அமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரஜினிஸ் சிங் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாஜ்மஹாலை மும்தாஜ் நினைவாக ஷாஜகான் தான் கட்டினார் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், எனவே இது குறித்து உண்மை தன்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடாக அவர் செய்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தாஜ்மஹாலுக்குள் இருக்கும் 22 ரகசிய அறைகளை திறந்து ஆய்வு நடத்த வேண்டும் என்று வைத்திருந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பாக முன்வைக்கவில்லை. தாஜ்மஹாலின் உண்மைத் தன்மை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்டால், இந்திய தொல்லியல் துறை சரியானப் பதில்களை வழங்கவில்லை என்றும் மனுவில் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.