இந்தியா

புதிய 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் திட்டமில்லை

புதிய 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் திட்டமில்லை

webteam

புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் திட்டம் இல்லை என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இந்தத் தகவலை மறுத்துள்ள பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ், புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரூ.500 மற்றும் குறைந்த மதிப்புள்ள பணத்தாள்களை அச்சடிக்கும் பணியிலேயே முழு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஏடிஎம் மையங்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்பட்டு வருவதாக கூறிய சக்திகாந்ததாஸ், தேவையான பணத்தை மட்டுமே ஏடிஎம் மையங்களிலிருந்து மக்கள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.