இந்தியா

மன்னிப்பா, நானா..? டிஐஜி ரூபா ஆவேசம்

மன்னிப்பா, நானா..? டிஐஜி ரூபா ஆவேசம்

webteam

’சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தொடர்பாக, நான் சொன்ன குற்றச்சாட்டுகளுக்காக யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டேன்’ என்று டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும் டி.ஐ.ஜி. ரூபா, சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது குற்றம்சாட்டினார். 
இந்நிலையில் சத்திய நாராயண ராவ், டி.ஐ.ஜி. ரூபாவுக்கு அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில், தன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லை எனில் ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். 
இதுபற்றி ரூபாவிடம் கேட்டபோது டி.ஜி.பி. சத்தியநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதை உறுதி செய்த அவர், ’நான் என் கடமையைத்தான் செய்துள்ளேன். நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்காக யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டேன். அவதூறு வழக்குகளை சந்திக்க தயாராக இருக்கிறேன். விசாரணையின் முடிவில் உண்மைகள் வெளிவரும்’ என்று தெரிவித்துள்ளார்.