இந்தியா

தென்னிந்தியாவில் நாட்டின் இரண்டாம் தலைநகரா? - மத்திய அரசு விளக்கம்

தென்னிந்தியாவில் நாட்டின் இரண்டாம் தலைநகரா? - மத்திய அரசு விளக்கம்

rajakannan

தென்னிந்தியாவில் நாட்டின் இரண்டாம் தலைநகர் அமைக்கும் திட்டம் ஏதுமில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாட்டின் தேவைக்காக தென்னிந்தியாவில் நாட்டின் இரண்டாவது தலைநகரை அமைத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இருகிறதா? என்றும் அப்படியிருந்தால் அதுகுறித்த தகவல்களை தெரிவிக்கவும் என்றும் உள்துறை அமைச்சகத்திற்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி கே.வி.ராமசந்திர ராவ் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “அப்படியேதும் திட்டமில்லை” என்று விளக்கம் அளித்தார். நாட்டின் தலைநகராக தற்போது புதுடெல்லி இருந்து வருகிறது. அதேபோல், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய மாநிலங்களவை எம்பி வைகோ, சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.