இந்தியா

‘ஏஎன்-32 விமானத்தில் பலியானோர் குடும்பம்பங்களின் பரிதாப நிலை’- எந்த அதிகாரியும் சந்திக்கவில்லை

‘ஏஎன்-32 விமானத்தில் பலியானோர் குடும்பம்பங்களின் பரிதாப நிலை’- எந்த அதிகாரியும் சந்திக்கவில்லை

webteam

ஏஎன்-32 ரக விமானத்தில் பயணித்து உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினை எந்த அதிகாரியும் சந்திக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்திய விமானப் படையின் விமானம் ஏஎன்-32 ஜூன் 3ஆம் தேதி மதியம் 12.25 மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டது. மதியம் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய விமானப் படை, இந்திய ராணுவம் உள்ளிட்டவர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒருவார கால தேடுதலுக்குப் பிறகு அந்த விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் லிப்போ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விமானப்படையை சேர்ந்த அதிகாரிகளோ அல்லது அரசு சார்பில் யாரும் ? சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் சமையல் பணிபுரிந்த ராஜேஷ் என்பவரின் சகோதரர் சந்தோஷ் கூறும்போது, ‘இதுவரை எங்களை ஒரு அதிகாரி கூட வந்து பார்க்கவில்லை. உயிரிழந்த யாருடைய குடும்பத்தினரையும் அவர்கள் சந்திக்கவில்லை. நாங்கள் என்ன அந்த அளவிற்கு தகுதியற்றவர்களா ?’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இதேபோன்று விமானத்தில் பயணித்து உயிரிழந்தவரின் மாமனாரும் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் சந்தோஷ் வீட்டின் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.