இந்தியா

ஷாங்காய் மாநாட்டில் மோடியுடன் இம்ரான் சந்திப்பு இல்லை

rajakannan

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடி இடையே சந்திப்பு ஏதுமில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பார்வையாளராக மட்டுமே இருந்து வந்த இந்தியா, கடந்த 2017ம் உறுப்பினராக இணைந்தது. இதையடுத்து இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜகிஸ்தான், உஸ்பெஸ்கிதான், பாகிஸ்தானை ஆகிய எட்டு நாடுகள் ஷாங்காய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் இந்தியா, இம்மாநாட்டில் கலந்து கொள்வது இது 3வது முறையாகும். 

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு ஜூன் 13-14 தேதிகளில் கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் போது, இம்ரான் கான், பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.