குடியுரிமையை நிரூபிக்கும் பொருட்டு யாரும் துன்புறுத்தப்படமாட்டார்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை தொடர்பாக, உள்துறை அமைச்சகம் தொடர் டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், கல்வி அறிவு பெறாத குடிமகன்கள் தங்களது குடியுரிமையை சாட்சிகள் மூலம் நிரூபிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விரிவான வழிகாட்டி முறைகளை மத்திய அரசு வெளியிடும் என்றும்,1971 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், பிறப்பு மற்றும் பிறந்த இடம் குறித்த ஏதாவது ஒரு ஆவணத்தை தாக்கலம் செய்யலாம் என்றும்.எந்தக் குடிமகனும் துன்புறுத்தப்படமாட்டார்கள் எனவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.