இந்தியா

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா? அமித் ஷா பதில்

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா? அமித் ஷா பதில்

ஜா. ஜாக்சன் சிங்

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

இதனிடையே, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சமீபத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பாஜக வழக்கறிஞர்கள் அணி, மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் மேற்கு வங்க பாஜக நிர்வாகிகள் மத்தியில் இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற அரசை நீக்குவது சரியாக இருக்காது; குடியரசுத் தலைவர் ஆட்சியை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தும் எந்த யோசனையும் மத்திய அரசிடம் இல்லை" என்றார். மேலும், பாஜகவினர் மனம் தளராமல், அரசியல் ரீதியாக போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.