இந்தியா

நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

jagadeesh

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்விலிருந்து சிறுபான்மை மருத்துவ கல்லூரியான வேலூர் சி.எம்.சி கல்லூரிக்கு விலக்கு அளிக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு, நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பு சரியாக உள்ளதாக தெரிவித்தது.

மேலும், நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் நீட் தீர்வில் இருந்து எப்படி விலக்கு அளிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்காக நீதிமன்ற உத்தரவை மாற்றி அமைக்க முடியாது எனக் குறிப்பிட்டனர்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என சி.எம்.சி தரப்பு வழக்கறிஞர் கோரினார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் பின்னர், மனுவைப் பெற அனுமதி அளித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.