இந்தியா

இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடா? - மத்திய அரசு விளக்கம்

இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடா? - மத்திய அரசு விளக்கம்

webteam

இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவதால், காற்று மாசுபாடு ஏற்படுவதற்கான எந்த தரவுகளும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவது காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கான காரணமா என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை உள்ள தரவுகளின் படி இதற்கான எந்த தகவல்களும் இல்லை என்றும், எனினும் சுற்றுப்புற சூழல் பாதிப்பில்லாத வகையில் இடுகாடுகளை பராமரிப்பதற்கான வழிமுறைகள், அவ்வப்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.