மோடி, நிதிஷ் எக்ஸ் தளம்
இந்தியா

திடீரென மோடி கையை இழுத்த நிதிஷ்குமார்.. ஷாக் ஆன பாதுகாவலர்கள்.. நடந்தது என்ன? #ViralVideo

Prakash J

2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, கடந்த 10 ஆண்டுகளை அசுரபலத்துடன் ஆட்சி செய்தது. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையை எட்டவில்லை. இதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அந்தக் கூட்டணியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் ஒன்று. அந்த கட்சி சார்பில் 12 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால், பாஜகவுக்கு எப்போதும் நிதிஷ்குமாரின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியின் கையை இழுத்து, நிதிஷ்குமார் ஏதோ அவரிடம் சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜ்கிரில் உள்ள புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாக திறப்பு விழாவில் பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷும் அருகருகே அமர்ந்துள்ளனர். திடீரென நிதிஷ்குமார் பிரதமர் மோடியின் கையைப் பிடித்து இழுத்து ஆச்சர்யப்படுகிறார். பிரதமர் மோடியின், ஆள்காட்டி விரலில் அழியாத வாக்கு மையை அவர் சரிபார்த்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு மோடியும் ஏதோ பதில் சொல்கிறார்.

இதையும் படிக்க: நடந்துசென்ற இளம்பெண்.. கொள்ளையடிக்க முற்பட்ட மர்ம நபர்கள்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. #ViralVideo

எனினும், மோடியின் கையை அவர் திடீரென இழுத்தது பின்னால் இருந்த பாதுகாவலர்களுக்கு அதிர்ச்சியானது. அவர், என்ன செய்கிறார் என தொடர்ந்து கண்காணித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த போதெல்லாம் மோடி தனியாகவே இருப்பார். அவர் அருகிலேயே யாரும் அமரமுடியாது. அவர்தான் லைம்லைட்டில் இருப்பார். அதிலும் மோடியை போட்டோ எடுக்கும் சமயங்களில் அவரின் அருகேகூட யாரும் செல்ல முடியாது. ஆனால், தற்போது விழாக்களில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நெருக்கம் காட்டும் வீடியோக்கள் வைரலாவதைத் தொடர்ந்து பாஜகவின் மீதும் மோடியின் வீமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: ஊழியர்களுக்கு குறைவான சம்பளம்; வளர்ப்பு பிராணிகளுக்கு அதிக செலவு.. நீதிமன்றத்தில் ஹிந்துஜா குடும்பம்