Nitish Kumar pt desk
இந்தியா

“I.N.D.I.A. கூட்டணிக்கான பிரதமர் வேட்பாளர்... எவ்வித ஏமாற்றமும் இல்லை” - நிதிஷ் குமார்

I.N.D.I.A. கூட்டணிக்கான பிரதமர் வேட்பாளரின் பெயரை முன்மொழிந்ததில் தனக்கு எவ்வித ஏமாற்றமும் இல்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

webteam

ஆளும் பாஜக அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற இதன் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை பிரதமர் வேட்பாளராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்மொழிந்ததற்கு, பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் அதிருப்தி அடைந்ததாக தகவல் வெளியானது.

india alliance

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய நிதீஷ் குமார், “பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதை விட முதலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவே தான் வலியுறுத்தினே. நான் பிரதமராக வேண்டும் என்று எப்போதும் தெரிவித்ததில்லை.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கூட்டணியில் இணைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். மக்களுக்கு சேவை செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்” என தெரிவித்தார்.