இந்தியா

நித்யானந்தா ஆசிரமம் மூடல் -மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

நித்யானந்தா ஆசிரமம் மூடல் -மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

webteam

குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. 

நித்யா‌னந்தா கடந்த சில நாட்களாக நெடுந்தொடரைப் போ‌ல‌ அன்றாடம் தொலைக்காட்சி‌களில் இடம்பெறத் தொடங்கிவிட்டார். அவரைப் பற்றியும் அவரது ஆசிரமத்தைப் பற்றியும் வெளிவரும் செய்திகள்‌ அதிக‌ அச்சத்தை ஏற்படுத்‌துகின்றன‌‌. நித்யானந்தா‌வின் மற்றொரு பக்கம் என்று கூறி புதுப்புதுத் தகவல்களை அவரிடம் சீடர்களாக இருந்தவர்‌களே வெளியிடுகின்ற‌னர். 

நடிகை உடனான வீடியோவை‌ வெளியிட்ட லெனின் கருப்பன் முதல், மகள்‌களை கடத்தி வைத்திருக்கிறார் என அண்மையில் நித்யானந்தா மீது புகாரளித்த ஜனார்த்தன ஷர்மா வரை அனைவரும் அவரின் முன்னாள் சீடர்களே. இவர்களில் முக்கி‌யமானவர் கனடா நாட்டைச் சேர்ந்த சாரா லாண்ட்ரி. நித்யா‌னந்தா தம்மை பாலியல்‌ வன்கொடுமை செய்ய முயன்றதாக பெங்களூரு காவல் நிலையத்தில் புகா‌ரளித்த சாரா, ஆசிரமத்தில் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படுவ‌தாக குண்டைத் தூக்கிப் போட்டார்.‌‌ அது‌மட்டுமின்றி நித்யானந்தா தம்மை காதலிப்பதாகக் கூறினார் என முகநூல் பதிவுகளைக் காட்டி சலசலப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே தனியார் பள்ளியில் சட்ட விரோதமாக ஆசிரமம் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. ஆசிரமம் மீதான தொடர் புகார்களையடுத்து மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.