Nita ambani Twitter
இந்தியா

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் முக்கிய பங்கு வகித்த காஞ்சிபுரம் கைத்தறி புடவை!

உலகில் பெரும் பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி தனது மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் காஞ்சிபுரம் கைத்தறி புடவையை அணிந்திருந்தார்.

PT WEB

நவீன இயந்திரங்கள் எத்தனை வந்தாலும் கைத்தறியில் நெய்த ஆடைகளுக்கான மவுசு என்றென்றும் இருக்கவே செய்கிறது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி தனது மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் காஞ்சிபுரம் கைத்தறி புடவையை அணிந்திருந்தது இதற்கு உதாரணம்.

காஞ்சிபுரம் கைத்தறி புடவையில் நீத்தா அம்பானி

உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தனது கடைசி மகனின் திருமணத்தின் முந்தைய திருமண வைபவத்தை மிக ஆடம்பரமாக நடத்தி வருகின்றனர் முகேஷ் அம்பானி தம்பதியினர். இந்த விழாவில், உலகின் தலைசிறந்த அனைத்து நிகழ்வுகளும் நடந்தேறி வருகிறது.

இதில் இன்னும் சிறப்பம்சம் என்னவென்றால் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி உலக அளவில் புகழ் பெற்ற காஞ்சிபுரம் புடவையை தேர்ந்தெடுத்ததுதான். ஆம், நமது நெசவாளர்கள் பாரம்பரியத்துடன் நேர்த்தியாக நெய்து கொடுத்த காஞ்சிபுரம் பட்டுப் புடவையைதான் அவர் அணிந்திருந்தார்.

இதுமட்டுமல்லாமல் அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழக கலைஞர்கள்தான் கருவறை கதவுகள், மணி போன்ற முக்கியமான பணிகளை செய்து கொடுத்துள்ளனர். அதேபோலதான் தற்போது நடந்துள்ள ஆனந்த் அம்பானியின் திருமண முந்தைய நிகழ்வுகளும்.

வட இந்தியர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து ஆடம்பர நிகழ்வுகளை நடத்தினாலும் தமிழர்களின் திறமை மிக்க தனித்துவம்தான் அங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.