இந்தியா

7 அறிவிப்புகள் வெளியாகின்றன - நிர்மலா சீதாராமன்

7 அறிவிப்புகள் வெளியாகின்றன - நிர்மலா சீதாராமன்

webteam

பிரதமர் அறிவித்த சுயசார்பு இந்தியா திட்டத்தின் இறுதிக் கட்ட அறிவிப்பில் 7 அறிவிப்புகள் வெளியாவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 4 நாட்களாக விவசாயிகள், மீனவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், நிலக்கரி பற்றிய அறிவிப்புகள் வெளியானது.

இந்நிலையில் தொடர்ந்து 5 வது நாளாக ரூ. 20 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார். நிர்மலா சீதாராமன் பேசுகையில் “கடந்த 2 நாட்களாக பல்வேறு சீரமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜந்தன் கணக்குகள் மூலம் மக்களுக்கு நேரடியாக பண உதவி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. ஏழைகளுக்கு ரேஷன் பொருட்களை கொண்டு சேர்த்த மாநில அரசுகளுக்கு பாராட்டுகள். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனாளிகளுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலங்களில் ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள நெருக்கடியான சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மத்திய அமாநில அரசுகளுடன் உணவுக் கழகமும் இணைந்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும். 100 நாள் வேலைதிட்டம், மருத்துவம் மற்றும் கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட 7 அறிவிப்புகள் இன்று வெளியாகின்றன. கொரோனா காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகிறது” எனத் தெரிவித்தார்.