யாராவது ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் என்றால் அதுதொடர்பான வழக்கைவிட வேறு அவசர வழக்கு எதுவும் இருக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார். இதற்கு எதிராக முகேஷ் குமார் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு முகேஷ் குமார் சிங் தரப்பு வழக்கறிஞர், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிடம் இன்று முறையிட்டார்.
அவரிடம், வழக்குகளை பட்டியலிடும் அதிகாரியை அணுகுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். யாராவது ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் என்றால், அதைவிட அவசர வழக்கு வேறு எதுவும் இருக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.