பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் நடந்த ரூ.11,500 கோடி மோசடி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பி விட்டதாகவும் இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என்பது குறித்தும் சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் நீரவ் மோடிக்கு சொந்தமான 15 மாடி கட்டடம், 17 அலுவலக வளாகங்களும், மகாராஷ்ட்ரா மாநிலம் போரிவிளி மற்றும் சாண்டாக்ரூஸ் பகுதியில் உள்ள கட்டடங்களை ஒரு பகுதியாக முடக்கியது. ஐதராபாத்தில் ரங்க ரெட்டி மாவட்டத்தில் உள்ள 170 ஏக்கர் (500 கோடி) சொத்துக்களும், மும்பை அலிபாக்கில் நான்கு ஏக்கர் பண்ணை வீடு, நாசிக், நாக்பூர், பன்வெல் மற்றும் தமிழ்நாட்டில் விழுப்புரம் போன்ற இடங்களில் 231 ஏக்கர் நிலமும் முடக்கபட்டுள்ளது .
மத்திய புலனாய்வு நிறுவனம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் (பி.எம்.எல்.ஏ) இணைப்பதற்கான தாற்காலிக உத்தரவை வெளியிட்டு லுக் அவுட் நோட்டிசையும் பிறப்பித்தது அமலாக்கத் துறை.