இந்தியா

நிரவ் மோடியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

நிரவ் மோடியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

webteam

வங்கிக் கடன் மோசடியில் கைதான தொழிலதிபர் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தொடர்ந்து மூன்றாவது முறையாக லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 கோடி ரூபாய் கடன் ஏய்ப்பு செய்து விட்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர் இங்கிலாந்தில் சுதந்திரமாக சுற்றித் திரிவது சமீபத்தில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை நாடு கடத்தும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து நீதிமன்றம் நிரவ் மோடிக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது. பின்னர் அவரை கைது செய்த லண்டன் காவல் துறையினர் வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சூழலில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கமுடியாது என ஏற்கெனவே இரு முறை நிராகரித்துவிட்டது. இந்நிலையில், மீண்டும் மூன்றாவது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடி ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிபதி எம்மா அர்புத்நாட், வழக்கின் முக்கிய சாட்சிகளை கலைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் இவ்வழக்கின் விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் நிரவ் மோடியை கைது‌ செய்ய மத்திய அரசு இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோ‌ட்டீஸ் ஏற்கெனவே பிறப்பித்துள்ளது.