இந்தியா

நிரவ் மோடியின் 13 சொகுசுகள் கார்கள் 18 ஆம் தேதி ஏலம்

நிரவ் மோடியின் 13 சொகுசுகள் கார்கள் 18 ஆம் தேதி ஏலம்

webteam

நிரவ் மோடியின் 13 கார்களை வரும் 18 ஆம் தேதி ஏலம் விட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 கோடி ரூபாய் கடன் ஏய்ப்பு செய்து விட்டு தலைமறைவாகியுள்ள நிரவ் மோடியின் வரி பாக்கியை வசூலிக்க, அவர் சேகரித்து வைத்திருந்த 173 ஓவியங்கள் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டது. இந்த ஓவியங்களை 54 கோடி ரூபாய்க்கு வருமான வரித்துறை ஏலம் விட்டது. 

இந்நிலையில், நிரவ் மோடியின் ரோல்ஸ் ராய்ஸ், போர்ச்சே, மெரிசிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 13 விலையுயர்ந்த சொகுசுக்‌ கார்களை ஏப்ரல் 18 ஆம் தேதி ஏலம் விட திட்டமிட்டுள்ளது. நன்றாக இயங்கும் நிலையில் உள்ள இந்தக் கார்களை ஏலம் விடுவதன் மூலம் சில கோடி ரூபாய்களை வசூலிக்க முடியும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏலம் ஆன்லைன் மூலம் நடக்கிறது.