இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களாக, நடிகைகள் நுஸ்ரத், மிமி பதவியேற்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களாக, நடிகைகள் நுஸ்ரத், மிமி பதவியேற்பு

webteam

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட மேற்கு வங்க நடிகை நுஸ்ரத்தும் அவரது தோழி மிமி சக்ரவர்த்தியும்  மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

பிரபல வங்காள நடிகை நுஸ்ரத் ஜஹான். ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்த லில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஷிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரும் பிரபல தொழிலதிபர் நிகில் ஜெயினும் கடந்த 19 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் துருக்கியில் உள்ள போட்ரம் என்ற இடத்தில் நடந்தது. 

மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு இளம் எம்.பியும் நடிகையுமான மிமி சக்ரவர்த்தியும் இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டார்.

இதன் காரணமாக, இவர்கள் மக்களவையில் எம்.பியாக பதவியேற்காமல் இருந்தனர். இந்நிலையில் இன்று மக்களவைக்கு வந்த இருவரும் எம்.பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர். வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், ஜெய் பங்களா என்று கூறி வங்க மொழியில் அவர்கள் பதவியேற்றனர்.