இந்தியா

அருணாச்சல பிரதேசத்தில் கண்டறியப்பட்ட புதிய தவளை இனம்

அருணாச்சல பிரதேசத்தில் கண்டறியப்பட்ட புதிய தவளை இனம்

Sinekadhara

டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளர்கள் புதியவகை தவளையை கண்டுபிடித்திருக்கின்றனர்.

இந்திய வனவிலங்கு நிறுவனமும் மற்றும் வட கரோலினா இயற்கை அறிவியல் அருங்காட்சியகமும் இணைந்து அருணாச்சல பிரதேச மாநிலத்தின் ஆதி மலையடிவாரத்தில் இந்த தவளை இனத்தைக் கண்டறிந்திருக்கின்றனர். ஆதி மலையடிவாரத்தில் இருந்து கண்டறியப்பட்டதால் இதற்கு ஆதி நீர்வீழ்ச்சி தவளை என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆதி தவளை கண்டறியப்பட்ட தகவல்கள் Journal of Natural History என்ற லண்டன் நாளிதழில் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் எஸ்.டி பிஜு கூறுகையில், இதுபோன்ற தவளை இனங்கள் நிறையக் காணப்பட்டாலும், ஒவ்வொரு இனத்திற்குமிடையே சிறுசிறு புவியியல் வேறுபாடுகள் இருக்கின்றன. வடகிழக்கு இந்தியா அறிவியலுக்கு ஒரு பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது’’ என்கிறார்.