இந்தியா

இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதர் நியமனம்

இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதர் நியமனம்

webteam

இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நிகோலாய் குடாஷெவ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்திய நாட்டுக்கான ரஷ்ய தூதராக 2009-ம் ஆண்டு முதல் அலெக்ஸாண்டர் கடாகின் பணியாற்றி வந்தார். இந்தியா - ரஷ்யா இடையே உள்ள உறவுக்கு பாலமாக திகழ்ந்தவராக கருதப்பட்ட இவர், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து, புதிதாக தூதர் நியமிக்கப்படாததால் அந்த பொறுப்பு காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள நிகோலாய் குடாஷெவ் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நிகோலாய் குடாஷெவ் நியமனத்திற்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, விரைவில் புதுடெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நிகோலாய் தனது பொறுப்புகளை ஏற்க உள்ளார். சமீபகால இந்திய - ரஷ்யா இடையேயான உறவில் நிகோலாய் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக, பாதுகாப்பு மற்றும் அணு ஒப்பந்தகளை நிறைவேற்றுவதில் இவர் தீவிரமாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகோலாய் இதற்கு முன்னதாக பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.