இந்தியா

முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்?

முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்?

webteam

 நாடாளுமன்றத்தின் புதிய வளாகம் ஆயிரத்து 350 உறுப்பினர்கள் அமரும் வகையில் முக்கோண வடிவில் கட்டப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024-ஆம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டிமுடிக்க சென்ட்ரல் விஸ்டா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 900 உறுப்பினர்கள் முதல் ஆயிரத்து 350 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் நாடாளுமன்ற மையப் பகுதியும் வடிவமைக்கப்படுகிறது. அத்திட்டத்தில் சவுத் பிளாக்கின் பின்புற பகுதிக்கு, பிரதமரின் இல்லத்தை இடம் மாற்றுவது, நார்த் பிளாக்கின் பின்புற பகுதிக்கு குடியரசுத் துணைத் தலைவரின் இல்லத்தை இடம் மாற்றுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த எச்.சி.பி என்ற வரைகலை நிறுவனம் புதிய நாடாளுமன்ற வளாகத்தை முக்கோண வடிவில் வடிவமைத்துள்ளது. தற்போது எம்பிக்கள் அமரும் வரிசைகளில் முதல் 2 வரிசையில் மட்டுமே மேஜைகள் இருப்பதாகவும், புதிய வளாகத்தில் அனைத்து வரிசைகளிலும் மேஜைகள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.