இந்தியா

லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் இனி தண்டனை - புதிய மசோதா

லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் இனி தண்டனை - புதிய மசோதா

webteam

லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை வழங்கும் புதிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படுகிறது. இதனை லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை வழங்கும்படி திருத்தி புதிய மசோதா கடந்த 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் பல திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். இதனால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் 43 புதிய திருத்தங்களுடன் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய சட்டதிருத்தத்தின் படி, லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் லஞ்ச வழக்குகளுக்கு சிறப்பு நீதிபதி விசாரணை மற்றும் 2 வருடங்களுக்கு தீர்ப்பு உள்ளிட்ட அம்சங்களும் இதில் அடங்கும்.