நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் கொரோனா தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 243 பேருக்கு கொரோனா என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் இதுவரை 220.09 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.13 கோடி இரண்டாவது டோஸ் மற்றும் 22.39 கோடி முன்னெச்சரிக்கை டோஸ் அடங்கும். கடந்த 24 மணிநேரத்தில் 81,097 டோஸ்கள் கொடுக்கப்பட்டன. இந்தியாவின் தற்போது 3,609 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செயலில் 0.01 சதவீதமும் , மீட்பு விகிதம் தற்போது 98.8 சதவீதமாகவும் உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 185 மீட்புகள் , மொத்த மீட்பு எண்ணிக்கை 4,41,43,850 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.11 % ஆகவும் , வாராந்திர விகிதம் 0.16% ஆகவும் உள்ளது. இதுவரை நடத்தப்பட்ட மொத்த சோதனைகள் 91.05 கோடி; கடந்த 24 மணி நேரத்தில் 2,13,080 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அருணா ஆறுச்சாமி.