இந்தியா

லஞ்சம் கொடுத்தால் இத்தனை ஆண்டு சிறையா...?

லஞ்சம் கொடுத்தால் இத்தனை ஆண்டு சிறையா...?

webteam

லஞ்சம் கொடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்‌ திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஊழல் தடுப்பு சட்டம் 1988-ல், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயல்பவர்களுக்கும் அதிக‌பட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், அபராதம் விதிக்கவும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் பெறுபவர்களுக்கான குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7 ஆண்டுகள் தண்டனை விதிக்க வழிவகை‌ செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அரசியல்வாதிகள், ‌வங்கி அதிகாரிகள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 

இத்தகைய ஊழியர்களை விசாரிக்கும்போது, அவர்களுடை‌ய மேல் அதிகாரிகளின் முன்அனுமதியின்றி , எந்த விசாரணையும் நடத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது. ஊழல் வழக்குகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.