அரசியலில் நுழைய நான் என்றைக்கும் ஆசைப்பட்டதில்லை என்று பிரதமர் மோடி தனது மன்கிபாத் உரையில் தெரிவித்துள்ளார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்காக ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று பேசிய பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசினார். இந்திய நாட்டின் கலாசாரம், மொழி குறித்தும் பேசினார். அப்போது பேசிய அவர், மொழியின் சிறப்பு குறித்து விளக்குவதற்காக மகாகவி பாரதியின் பாடலை பாடி மேற்கோள் காட்டினார்.
அத்துடன் அதில் தனது அரசியல் வாழ்க்கை குறித்தும் சில கருத்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு அரசியலில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே இல்லை. ஆனால் நான் தற்போது அரசியலில் ஒரு முக்கிய அங்கத்தை வகிக்கிறேன். என்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்காக நான் நன்றாக பணியாற்றி இருக்கேன்” எனத் தெரிவித்துள்ளார்.