நேபாள பணம் ட்விட்டர்
இந்தியா

புதிய 100 ரூபாய் தாளில் இந்திய பகுதிகள்.. நேபாள அரசின் புதிய வரைபடத்தால் சர்ச்சை!

Prakash J

நம்முடைய அண்டை நாடுகளில் ஒன்று, நேபாளம். இந்தியா – நேபாள எல்லையில் உள்ள லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய பகுதிகளை இந்தியா பராமரித்து வருகிறது. இந்த நிலையில், இப்பகுதிகளை தங்கள் எல்லைப் பகுதிக்குள் சேர்த்து அதற்கான வரைபடத்தை நேபாள அரசு, புதிய 100 ரூபாய் தாள் மூலம் வெளியிட திட்டமிட்டிருப்பது சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

india - nepal border

”கடந்த ஏப்ரல் 25 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, ​​100 ரூபாய் நோட்டை மறுவடிவமைக்கவும், பழைய ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட பழைய வரைபடத்தை மாற்றவும் அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என நேபாள அரசு செய்தித் தொடர்பாளர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உ.பி.| ஓடும் ரயிலில் மனைவிக்கு ’தலாக்..’ தப்பியோடிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு!

கடந்த 2020 ஜூன் மாதம், நேபாள அரசு, லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா பகுதிகளை இணைத்து, நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை புதுப்பிக்கும் செயல்முறையை நிறைவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்தியா அப்போதே கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தது. நேபாளத்தின் இப்படியான செயற்கை விரிவாக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், நேபாள அரசின் புதிய 100 ரூபாய் தாளில் இந்திய எல்லைப் பகுதிகள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள நாடானது இந்தியாவின் ஐந்து மாநிலங்களுடன் சுமார் 1,850 கிமீ எல்லைப் பகுதியை பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”28 சதவிகிதம் ஜிஎஸ்டி எதற்கு?” - மத்திய அரசுக்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பிய ராஜீவ் பஜாஜ்!