நீட் தேர்வு - உச்சநீதிமன்றம் புதிய தலைமுறை
இந்தியா

நீட் தேர்வு: கருணை மதிப்பெண்கள் ரத்து.. மறுதேர்வு எப்போது?

PT WEB

வரும் ஜூன் 23-ஆம் தேதி, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1563 பேருக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கருணை மதிப்பெண்கள் தொடர்பான மனுக்களையும் உச்சநீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. இதன்மூலம் வரும் 23-ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

நீட் தேர்வு முறைக்கேடு

நீட் தேர்வில் பல புகார்கள் எழுந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 67 மாணவர்கள் முதலிடம் பிடித்திருந்தது, 6 மாணவர்கள் முழு மதிப்பெண்களைப் பெற்றிருந்தது, வினாத்தாள் கசிவு தொடர்பான பல்வேறு புகார்கள் பெறப்பட்டன.

இந்த வழக்குகளின் விசாரணை ஒருபுறம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு கோடைக்கால விடுமுறை அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இதற்கொரு தீர்வு எட்டப்பட்டுள்ளது. ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடத்தவும் 30-ஆம் தேதி முடிவுகளை வெளியிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.