எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அது பின் மார்ச் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டும் ஏராளமானோர் விண்ணப்பிக்க தவறினர். இதனால் உரிய நேரத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்காக தேசிய தேர்வு முகமை சிறப்பு வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி இன்றும், நாளையும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் நாளை இரவு 10.59 மணி வரை ஆன்லைன் வழியாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரவு 11:59 மணிக்குள் அதற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 5ஆம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது