இந்தியா

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Karthick

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால் திட்டமிட்டபடி செப்டம்பர் 12-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது.

செப்டம்பர் 12-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. நீட் தேர்வின் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. காரணம், அன்றைய தினத்தன்று வேறு சில தேர்வுகள் நடைபெற இருப்பதால், நீட் தேர்வு நடைபெறும் தேதியை ஒத்திவைக்க கோரபட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஒரு சில மாணவர்களுக்கு தேர்வு தேதி பிரச்னைக்குரியதாக இருப்பதால் தேதியை மாற்ற முடியாது. 16 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த நீட் தேர்வை இந்தக் காரணத்துக்காக ஒத்திவைக்க முடியாது. திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறும்’ என கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.