இந்தியா

டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்

டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்

Sinekadhara

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலை மிகத் தீவிரமாக பரவிவருகிறது. முதல் அலையைவிட இரண்டாம் அலையில் தொற்றின் வேகமும், நுரையீரல் பாதிப்பும் அதிகமாக இருப்பதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்துவருகின்றனர். இதனால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் உற்பத்தியை வேகமாக அதிகரிக்கவேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ள நிலையில், பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனின்றி கொரோனா நோயாளிகள் உயிரிழந்துவருகின்றனர்.

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையான சர் கங்காராம் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் கடந்த 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆக்ஸிஜன் 2 மணிநேரத்துக்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகள் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும், உடனடியாக தங்கள் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வசதியை ஏற்படுத்தி தருமாறும் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் வெண்டிலேட்டர்ஸ், பிபப் கருவிகள் முழுமையாக செயல்படவில்லை எனவும் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.