இந்தியா

அடேங்கப்பா ஒரு மீன் 800 கிலோவா..? ஆச்சர்யத்தில் பார்த்துச் சென்ற மக்கள்..!

அடேங்கப்பா ஒரு மீன் 800 கிலோவா..? ஆச்சர்யத்தில் பார்த்துச் சென்ற மக்கள்..!

Sinekadhara

780 கிலோ எடையுள்ள ராட்சத மீன் மேற்கு வங்காளத்தில் திகா கடற்கரையைச் சேர்ந்த மீனவர்களுக்கு பிடிபட்டது. 8 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட இந்த மீனை ரூ.50 ஆயிரத்திற்கு விற்றுள்ளனர்.

திகாவிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் உதய்பூர்ருக்கு அருகில் இந்த மீன் பிடிபட்டுள்ளது. இது ராட்சத மீன் வகையான மந்தா ரே வகையை சேர்ந்தது. கிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் கிடைக்கும் அனைத்து ரே வகை மீன்களுக்கும் பொதுவாக சங்கரா மீன் என்று பெயர்.

இந்த மீனைப் பார்க்க பெரிய கூட்டமே அங்கு கூடியது. இதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருந்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள்கூட ஆர்வமாக வந்து இந்த மீனைப் பார்த்துச் சென்றனர். வங்காளத்தில் அதிகமாக சாப்பிடும் மீன்களில் சங்கரா மீனும் ஒன்று.

கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 300 கிலோ எடையுள்ள இதே வகையைச் சேர்ந்த மீன் ஒன்று திகா கடற்கரைப் பகுதியில் பிடிபட்டது.