pm modi, rahul gandhi pt web
இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் I.N.D.I.A. கூட்டணி, எந்தெந்த கட்சிகள் எவ்வளவு இடங்களில் வெற்றி?

தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் I.N.D.I.A. கூட்டணியில் உள்ள கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளன என்பதை பார்க்கலாம்.

PT WEB

தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளன என்பதை பார்க்கலாம்.

தேசிய ஜனநாயக கூட்டணி

nota - bjp

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை, பாஜக 240 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், ஷிண்டேவின் சிவசேனா 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், லோக் ஜனசக்தி 5, மதச்சார்பற்ற ஜனதா தளம் 2, மற்றவை 10 என என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது.

I.N.D.I.A. கூட்டணி

I.N.D.I.A. கூட்டணியை பொறுத்தவரை மொத்தம் 234 தொகுதிகளில்வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 99 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும் திமுக 22 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 9 தொகுதிகளிலும் வாகைசூடியுள்ளன. அதேபோல், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 8, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4, ஆம் ஆத்மி 3, ஐயூஎம்எல் 3 தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்துள்ளன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 3, இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகியவை தலா 2 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

தமிழ்நாடு

தமிழ்நாடு, புதுச்சேரியை பொறுத்தவரை 40-க்கு 40 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. கொ.ம.தே.க.வுடன் சேர்த்து திமுக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெற்றுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக தலா 2 தொகுதிகளையும், மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் போட்டியிட்ட தலா ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளன.

மக்களவைத் தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றுள்ளன என்பதை தற்போது பார்க்கலாம்.

எந்தெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதம்?

மக்களவைத் தேர்தலில் பாஜக 36.56 சதவிகித வாக்குகளும், காங்கிரஸ் 21.19 சதவிகித வாக்குகளும், சமாஜ்வாதி 4.58 சதவிகித வாக்குகளும், திரிணமூல் காங்கிரஸ் 4.37 சதவிகித வாக்குகளும், பகுஜன் சமாஜ் 2.04 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.

தெலுங்கு தேசம் கட்சிக்கு 1.98 சதவிகித வாக்குகளும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 1.57% வாக்குகளும், உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 1.48% வாக்குகளும், ஷிண்டே சிவசேனாவுக்கு 1.15% வாக்குகளும் கிடைத்துள்ளன. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 0.92 சதவிகித வாக்குகளும், பிஜூ ஜனதா தளம் 1.46 சதவிகித வாக்குகளும், ஆம் ஆத்மி 1.11 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை திமுக 26.93 சதவிகித வாக்குகளையும், அதிமுக 20.46 சதவிகித வாக்குகளையும், பாஜக 11.24 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக காங்கிரசுக்கு 10.73 சதவிகித வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 8.22 சதவிகித வாக்குகளும் பாமகவுக்கு 4.33 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.

மேலும், தேமுதிகவுக்கு 2.59 சதவிகித வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2.52 சதவிகித வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2.15 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் நோட்டாவுக்கு 1.06 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர்.