மாநிலங்களவைக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் ஒன்பது பாஜக உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளதால், மாநிலங்களவையில் பாஜகவுக்கு உள்ள பலம் 96 ஆக உயர்ந்துள்ளது. இவர்களன்றி அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும், ராஷ்ட்ரிய லோக் மன்ச் கட்சியை சேர்ந்தவர் ஒருவரும், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
இதையடுத்து, மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தவிர, நியமன உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் ஒரு சுயேட்சை உறுப்பினர் ஆகியோரின் ஆதரவும் உள்ளதால், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 119 ஆக உயர்ந்துள்ளது.
245 இடங்களை உள்ளடக்கிய மாநிலங்களவையில், 8 காலி இடங்கள் உள்ளதால், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 119 ஆக குறைந்துள்ளது.