இந்தியா

ஒடிசா புயல் நிவாரணமாக ஒரு வருட சம்பளத்தை அளித்த முதலமைச்சர்

ஒடிசா புயல் நிவாரணமாக ஒரு வருட சம்பளத்தை அளித்த முதலமைச்சர்

webteam

புயலில் பாதிக்கட்ட ஒடிசாவிற்கு அம்மாநில முதலமைச்சர் நவின் பட்நாயக் தனது ஒரு வருட சம்பளத்தை அளிப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஃபானி புயல், இறுதியாக ஒடிசாவிற்கு சென்று ஓய்ந்தது. அங்கு புயலால் ஏற்பட்ட பாதிப்பில் பலர் உயிரிழந்தனர். பெரும் சேதம் ஏற்பட்டது. புயல் பாதிப்பிற்காக ஒடிசாவிற்கு ரூ.341 கோடியை முன்னதாகவே அறிவித்த மத்திய அரசு, பிரதமர் பார்வையிட்ட பின்னர் கூடுதலாக ரூ.1000 கோடியை அறிவித்தது. இந்த அறிவிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அதிகாரிகளுடன், மத்திய அமைச்சரவைச் செயலாளர் பிகே சின்ஹா ஆலோசணை நடத்தினார். 

பின்னர் பேசிய அவர், “ஒடிசாவை மீட்பதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அங்கு குடிக்கும் தண்ணீர் தேவை இருக்கிறது. மின்சாரம் இணைப்புகளை கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது. தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் முழுமையாக செயல்படவில்லை” என்றார். 

இதனால் இந்தியாவின் அனைத்து கட்சித் தலைவர்களும் நிவாராண நிதிகளை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது ஒரு வருட சம்பளத்தை நிவாரணமாக அறிவித்துள்ளார். குறிப்பாக புபனேஷ்வர் மற்றும் பூரி ஆகிய பகுதிகளில் மிகுந்த சேதம் அடைந்துள்ளதால், அந்த இடங்களில் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார்.