இந்தியா

ஹத்ராஸ் பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு நோட்டீஸ்

ஹத்ராஸ் பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு நோட்டீஸ்

sharpana

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம்பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக பாஜகவின் ஐ.டி விங் தலைவர் அமித் மால்வியா, காங்கிரஸ் கட்சியின் திக் விஜய் சிங், நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக இம்மூவருக்கும் தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 228 ஏ (2) படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் தடையுத்தரவு உள்ளது. இதை மீறியதால் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது மகளிர் ஆணையம்