இந்தியா

சிகிச்சைக்கு பணம் இல்லை: புற்றுநோயுடன் போராடும் கராத்தே சாம்பியன்

சிகிச்சைக்கு பணம் இல்லை: புற்றுநோயுடன் போராடும் கராத்தே சாம்பியன்

webteam

கராத்தே போட்டிகளில் தேசிய அளவில் 4 முறை தங்கப்பதக்கத்தை வென்ற பிரியங்கா, சிகிச்சைக்கு பணம் இல்லாமல் புற்றுநோயுடன் போராடி வருகிறார்.

லூதியானாவை சேர்ந்தவர் பிரியங்கா. தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் 4 தங்கப்பதக்கங்களையும், மாநில அளவிலான போட்டிகளில் 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 18 வயதான பிரியங்கா கடந்த ஆண்டு மலேசியாவில் நடைப்பெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க சென்றார். பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற கனவுகளோடு மலேசியா சென்ற பிரியங்காவுக்கு அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த புற்றுநோய் இருப்பதாக தெரிவித்தனர். அவரது மருத்துவ செலவுக்கு போதிய பணமில்லாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். மாதம் ரூ.5000 மட்டுமே வருவாய் ஈட்டும் அவரது தாயாரால் மருத்துவச் செலவைச் சமாளிக்க இயலவில்லை. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை வாங்கிக்கொடுக்கும் நிலையில் அவரது குடும்பம் இல்லை.

இதுகுறித்து பிரியங்கா கூறும்போது, நான் புற்றுநோயை எதிர்த்து போராடுகிறேன். விரைவில் நலம்பெறுவேன். நான் எதற்கும் பயப்படமாட்டேன். நாங்கள் ஏழைகளாக இருக்கிறோம். சிகிச்சைக்கு போதுமான நிதி இல்லை. இருப்பவர்கள் உதவுங்கள்’ என தெரிவித்துள்ளார்.