இந்தியா

”ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” -  அமித் ஷா 

”ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” -  அமித் ஷா 

webteam

ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு உண்மைக்கு கிடைத்த வெற்றி என பாஜக கூறியுள்ளது. மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை ஏதும் நடத்த தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மோடி அரசு ஊழல் இல்லாதது என்பதை உறுதி செய்துள்ளதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். மேலும், ரஃபேல் தொடர்பாக நாடாளுமன்றத்தை முடக்கியது அவமானம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். 

எனவே, ராகுல் காந்தி இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமித் ஷா கூறினார். இதேபோல, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.