இந்தியா

எப்போது அமலாகிறது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மருத்துவத்திட்டம்?

எப்போது அமலாகிறது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மருத்துவத்திட்டம்?

webteam

தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம் வரும் ஆகஸ்ட் 15 அல்லது அக்டோபர் 2-ம் தேதி அமலாகுமென தகவல் வெளியாகியுள்ளது.

10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 கோடி பேருக்கு‌ முழுமையான சுகாதார பாதுகாப்பு அளிக்கும் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 12ஆயிரம் கோடி ரூபாய் பிரீமியம் தொகை தேவைப்படுகிறது. இதன்படி குடும்பம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரீமியத்தில் 60 சதவிகிதம் தொகையை மத்திய அரசும், 40 சதவிகித தொகையை மாநில அரசுகளும் செலுத்தும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சதவிகிதம் சுகாதார வரி காரணமாக 11ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.