இந்தியா

17,000 அடி உயரத்தில் உள்ள லடாக்கில் ஏற்றப்பட்ட மூவண்ணக்கொடி - வீடியோ!

17,000 அடி உயரத்தில் உள்ள லடாக்கில் ஏற்றப்பட்ட மூவண்ணக்கொடி - வீடியோ!

webteam

குடியரசு தினத்தை முன்னிட்டு 17,000 அடி உயரத்தில் உள்ள லடாக்கில் எல்லை பாதுகாப்பு படையினர் கொடியேற்றினர்

நாட்டின் 71ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல்சாசனம் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 26ஆம் தேதி, குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றினார்.

டெல்லி ராஜபாதையில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்ற உள்ளார். இந்நிகழ்வையொட்டி தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

குடியரசு தின கொண்டாட்டத்தை அடுத்து 17,000 அடி உயரத்தில் உள்ள லடாக்கில் கொடியேற்றப்பட்டது. பனிபோர்த்திய மலையில் எல்லை பாதுகாப்பு படையினர் தேசியக் கொடியை ஏற்றினர்.