இந்தியா

குரு ரவிதாஸ் ஜெயந்தி: ஆர்வத்துடன் இசைக்கருவி வாசித்த பிரதமர் மோடி

குரு ரவிதாஸ் ஜெயந்தி: ஆர்வத்துடன் இசைக்கருவி வாசித்த பிரதமர் மோடி

JustinDurai

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி கரோல்பாக்கில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

ஆன்மிகவாதி, கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிக குரு எனப் பன்முகங்கள் கொண்ட குரு ரவிதாஸின் 645வது பிறந்தநாளை ஒட்டி, ரவிதாஸ் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லி கரோல்பாகில் உள்ள ரவிதாஸ் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார்.

குரு ரவிதாஸ் திருவுருவச் சிலைக்கு அவர் தீப ஆராதனை காட்டி பூஜைகள் செய்தார். பின்னர் அங்கிருந்த பக்தர்களுடன் அமர்ந்து, அவர்கள் பாட்டுப்பாட அதற்கேற்ப பிரதமர் மோடி இசைக்கருவி ஒன்றை இசைத்து கீர்த்தனையில் ஆர்வமுடன் பங்கேற்றார்.

இதையும் படிக்க: கர்நாடகா: ஹிஜாப் சர்ச்சையால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் திறப்பு