இந்தியா

ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

Rasus

ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அறிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதை கைவிட்டு, உரிய கவுரவத்துடன் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய அமைச்சர், ஹஜ் பயணத்துக்கு வழங்கப்பட்ட மானியத் தொகை, சிறுபான்மையின பெண்கள் கல்வி மேம்பாட்டுக்கு செலவிடப்பட உள்ளதாகவும் கூறினார். 2012ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் ஹஜ் மானியத்தை கைவிட உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை சுட்டிக்காட்டிய அமைச்சர் நக்வி, அதனடிப்படையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி மானியம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடல் மார்க்கமாக ஹஜ் பயணத்துக்கு சவுதி அரேபிய அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதற்கான நடைமுறைகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.