இந்தியா

விமர்சனங்கள் எதிரொலி: பொருளாதார விவகார ஆலோசனைக் குழுவை அமைத்தார் மோடி

விமர்சனங்கள் எதிரொலி: பொருளாதார விவகார ஆலோசனைக் குழுவை அமைத்தார் மோடி

rajakannan

பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழுவை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார். நிதி ஆயோக் உறுப்பினரான பிபேக் தேப்ராய் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5 பேர் கொண்ட இந்த குழுவில் சுர்ஜித் பல்லா, ரதின் ராய், அஷிமா கோயல் ஆகிய மூன்று பேர் பகுதி உறுப்பினர்களாக செயல்படுவார்கள். குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய், ரதன் வடால் ஆகியோர் நிரந்திர உறுப்பினர்களாக உள்ளனர். இந்தியாவின் நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும் நோக்கில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பொருளாதார கொள்கைகள் தொடர்பான ஆலோசனைகளை பிரதமர் மோடிக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி அறிமுகம் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டி.பி) வீழ்ச்சி அடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.