விவசாயிகளின் வருமானம் 2022 ஆம் ஆண்டிற்கு இரண்டு மடங்காகும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
நரேந்திர மோடி ஆப்ஸ் மூலமாக 600 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுடன் உரையாடிய போது பிரதமர் இதனை தெரிவித்தார். உரையாடலின் போது மோடி பேசுகையில், “கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் நமது விவசாயிகளின் வருமானம் 2022 ஆம் ஆண்டிற்குள் இரண்டு மடங்கு ஆகும். அதற்கான பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். அதற்காக விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறோம். இந்திய விவசாயிகள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.
இந்த உரையாடலின் போது விவசாயத் துறைக்கு தமது அரசு செய்து வரும் பெரிய திட்டங்கள் குறித்து மோடி எடுத்துரைத்தார். “விவசாயத்தை மேற்கொள்வதற்கான தேவைகள், விளை பொருட்களுக்கன உரிய விலை, விலை பொருட்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள், விவசாயிகளுக்கு வருமானம் வருவதற்கான மாற்று வழிகள் இந்த நான்கும் முக்கியமான விஷயம் ஆகும். தற்போது விவசாய உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தியோடு, பால் உற்பத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியிலும் அதிக விளைச்சல் கண்டுள்ளோம். விவசாயிகளுக்காக அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்” என்றார் மோடி.