இந்தியா

மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக தாக்குதல்: தொடரும் கொடுமை!

மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக தாக்குதல்: தொடரும் கொடுமை!

webteam

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி ஒருவரை சிலர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் நாக்பூர் அருகே பார்சிங்கி (Bharsingi) பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்த சிலர், அவரை மாட்டிறைச்சி கொண்டு செல்வதாகக் கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவத்தை சிலர் சுற்றிநின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மாட்டிறைச்சி தொடர்பாக தொடர்ந்து பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக கடந்த 2010 ஆண்டில் இருந்து நாடு முழுவதும் தாக்குதல்களும், வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றபின் பசு பாதுகாவலர்கள் எனும் போர்வையில் சிலர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை ஏற்கமுடியாது என பிரதமர் உரையாற்றிய அதே நாளில் ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.