இந்தியா

ராஜினாமா செய்யவில்லை - ரம்யா

ராஜினாமா செய்யவில்லை - ரம்யா

webteam

காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள தலைவராக உள்ளவர் நடிகையும் முன்னாள் எம்பியுமா ரம்யா. மாண்டியா தொகுதி எம்பியாக இருந்த இவரை, காங்கிரஸ் கட்சி சமூக வலைத்தள பிரிவு தலைவராக நியமித்தது. ரம்யாவின் வருகைக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மற்றும் தொண்டர்களின் சமூக வலைத்தள பதிவுகள் சற்று அதிரடியாகவே இருந்தது. 

குறிப்பாக சமூக வலைத்தளங்களை கையாள்வது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து பேசி வந்தார். இதனால் கட்சியிலும் ரம்யாவுக்கு நல்ல பெயர். இந்நிலையில் ரபேல் விவகாரத்தில் பிரதமரை விமர்சனம் செய்ததற்காக ரம்யா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இன்னும் அதிகமாக விமர்சிப்பேன் என ரம்யா பதிலளித்தார்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து ரம்யா விலகிவிட்டதாகவும், கட்சியில் அவருக்கு வேறு பொறுப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து புதிய தலைமுறையிட பேசிய ரம்யா “ எனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யவில்லை, தொடர்ந்து அதில் செயல்படுகிறேன், ட்விட்டர்  பயோவில் ஏற்பட்ட மாற்றத்தால் இதனை பரப்பியிருக்கிறார்கள்” என பதிலளித்தார்.